இரவின் மடியில்
இரவின் மடியில்
இப்போது எனக்கு
உறக்கமில்லை,
இருந்தும் நிலவென்னை
தாலாட்ட மறப்பதில்லை.
கருவறை தாய்கூட
கடந்து செல்லும்
காலம் வரும்.
ஆனால், நாம்
கல்லறை செல்லும்வரை
காதல் நம் கூடவரும்.
எல்லாம் அறிந்துகொண்டும்
என்னை பிரிந்து சென்றாய்
இருந்தும் உன் நினைவு
இன்றும் பிரிவதில்லை
ஏதோ பிதற்றுகின்றேன்
இன்றுவரை உளறுகிறேன்
காதல் எனக்கின்று கானலாகலாம்
அதுவும் ஒருநாள் காலமாகலாம்.
நீ என்னை நினைத்திருந்தால்
என் உளறல் புரிந்திருக்கும்
நீ எனக்கு இல்லையென்று
ஆனபின்பு, எதுதான்
என் மனதில் நிலைத்த்ருக்கும்