அவளா இவள் !
பேருந்தில்
ஒதுங்கி நில்
என்றான்
சீறினாள் சினந்தாள்
தொலைத்து விடுவேன்
என மிரட்டினாள்
சொன்னவன் ஓடி
ஒளிந்தான்
குனி என்றான்
கை கூப்பி குனிந்தாள்
மலடி என்றான்
ஆமாம் என்றாள்
சாட்டையை எடுத்து
சரமாரியாய்
பூசாரி வீசினான்
எதிர்ப்பு ஏதுமின்றி
அடியை வாங்கினாள்
அடித்ததால் குழந்தை
பிறக்கும் என்றான்
ஐந்தறிவு போல
தலையை ஆட்டினாள்
திருவிழாவுக்கு
பேருந்தில் அவளோடு
வந்த ஒருவன்
அவளா இவள் என வியந்தான் !