மழைபாடகி

மழை துளிகள் நடத்தும்
சங்கீத கச்சேரி ..
பாட்டு எழுத வாருங்கள் ..
கவிஞர்களுக்கு அழைப்பு ..
மேகங்கள் இசை கருவியை
மீட்ட
மின்னல் வெளிச்சத்தில்
மழை பாடகி
ராகங்களை கொட்டுகிறாள் ..
இசை மழையில் நனைந்தால்
சோகங்கள் கரையுது..
புது சந்தோசம் பாயுது ...
மழை தரும் குளிர்ச்சியினால்
இதயம் கூட இசைகிறது ...