அத்தை மகள் ஆடி வந்தாள்

அத்தை மகள் ஆடி வந்தாள்
சித்திரை நிலவு கூட வந்தது
மஞ்சள் பூசி வந்தாள்
மருக்கொழுந்து மல்லிகை சூடி வந்தாள்
களத்து மேட்டு கவிதை வந்தாள்
கஞ்சிக் கலயம் சுமந்து வந்தாள்
மாமன் மகனே மச்சானே முறுக்கு மீசை வச்சவனே
மல்லு வேட்டி கட்டி மணமமுடிக்கப் போறவனே
மதியவேளையிலே பசிக்கலையா உனக்கு
கஞ்சி கொணாந்திருக்கேன் கொஞ்சம்
குடிச்சிட்டுப் போ என்றாள்
கஞ்சிச் சட்டி பிடிக்கையிலே கையை இறுக்கிப்
பிடிச்சுப் புட்டேன்
ஆத்தாடி அநியாயம் கையை புடிச்சி இழுக்கைகீளே
ஊர் பார்த்தா என்ன நினைக்கும்
கட்டழகா என் களத்து மேட்டு முத்தழகா
தை மாசம் பொறந்துப்புட்டா தாலி
கட்டிப்புட்லாம் அப்போ
முழுப்பாட்டையும் முழுசா படி முடிச்சிடலாம்
அதுக்குள்ளே என்ன அவவசரம் என்று
கன்னத்திலே செல்லமாய் தட்டிவிட்டு
சிட்டாய் பறந்து விடடாள்
---கவின் சாரலன்