மறக்கவும் கூடுமோ..

விடியாதா!!!!! என்ற ஏக்கம்
குழாயடியை நோக்கியா என் பார்வை
தண்ணீர் பிடிக்க வரமாட்டாய!!!! என்று
சிறிதும் தயக்கம் இன்றி மிதி வண்டியில்
உலா வந்த நேரங்கள்
முதலில் அனுப்பிய தீபாவளி வாழ்த்து ...
எனக்காக நீ எழுதிய பரீட்சை
ஒரு முறை நண்பனிடம்
பேனா இரவல் வாங்கியதற்காக மறு நாள்
நிறைய பேனாக்களை கொடுத்த அந்த நாள்
உனக்காக மாற்றிய என் குறிப்பு பாடம்
உனக்காக தூக்கிய பாட புத்தகங்கள்,
வெள்ளிகிழமை எப்போ வரும் என்ற நாட்கள்
உன் பள்ளி சீருடை நிறத்தில் யார் சென்றாலும்.....
உன் தாயாரை முதலில் சந்தித்த அந்த நாள்
உன் தங்கைக்கு பாதுகாப்பாக இருந்த நாள்
பரிச்சையில் மயக்கம் ஆகிய அந்த நாள்
நண்பர்களிடம் என்னை பற்றி விசாரித்த நாள்

என் நண்பனே என்னை உன்னிடம் தூது விட்ட அந்த நாள் !!!!!!!!

மறக்கவும் கூடுமோ....

எழுதியவர் : முறையூர் ஆறுமுகம் திருப் (3-Nov-11, 5:45 pm)
பார்வை : 498

மேலே