மரணம் என்னை காதல் செய்யவில்லை என்பதனை எண்ணி வருந்தியவனாக.......!

ஓரக் கண்ணால் பார்த்து
ஒற்றை நகை பூத்து...
உன்னிடம் பேசிடவே
பலநாட்கள்...................
ஆரம்பித்தேன்
நட்பெனும் போர்வையுடன்
நயவஞ்சகமாயில்லை
அன்பும் அளவற்ற
காதலும் உன்னில் நான்கொண்டு.....
சில வருடம் கழித்து
காதலை இனிமையுடன்
கனவும் பல சுமந்து
கூறவந்தேன் உன்னிடம்......
காலத்தின் சதியோ இது.......?
இல்லை காலனின் செயலோ.......?
உன்
காதலை நீயும் என்னிடம்
உரைக்க எண்ணியிருந்தாய்
என்பதை புரிந்தேன்
உன் மரித்த உடலின்மேலிருந்த
அழகிய அட்டையின் வரிகளில் இருந்து.....
மரணித்தேன் அன்பே அக்கணமே
நானும்
இன்றும் உன் நினைவில் வாழ்கின்றேன்.........
மரணம் என்னை காதல் செய்யவில்லை என்பதனை
எண்ணி வருந்தியவனாக.......!!!!!




எழுதியவர் : அம்மு.......................... (3-Nov-11, 7:04 pm)
பார்வை : 845

மேலே