என் அன்பிற்க்கினியவர்களே....!!!!
என் அன்பிற்க்கினியவர்களே,
என் தோல்விகளில் இருந்து
நான் மீண்டு எழ ,
என் சோகங்களில் நான்
கரைந்து போகாமலிருக்க,
என் உழைப்பில் நான்
சோர்ந்து போகாமலிருக்க,
தன்னம்பிக்கை இழந்து
சுருண்டு விடாமலிருக்க ,
மிரட்டும் வறுமையில் நான்
தவறான பாதைக்கு போகாமலிருக்க...,
நான் இறந்த பின்பு
என் கல்லறையில் நீங்கள்
தூவப்போகும் மலர்களை ,
போடப்போகும் மாலைகளை
வைக்கப்போகும் மலர் வளையங்களை
தவிர்த்துவிடுங்கள் ...,
நான் வாழும் இந்நாளில்
அந்த மலர்களில் ஒன்றே ஒன்றை
என் கையில் இன்று தந்து
உற்சாகபடுத்தி செல்லுங்கள்
என் வாழ்க்கையை நான்
முழுவதுமாய் ரசித்து வாழ்ந்து
தீர்க்க வேண்டும் .........!!!!!