திரியும் பேசுமோ!

திரியும் பேசுமோ!
திரித்துப் பேசுவதில்
திறமைசாலி மனிதர்கள்;

கற்றுத் தர ஆட்கள்
யாரும் தேவையில்லை,
தொலைக்காட்சித் தொடர் போதுமே;

இன்று முடியும்,
நாளை முடிந்து விடும் என்றாலும்
தொடர்ந்து திரித்துக் கொண்டே
இருப்பார்கள்;

தாங்க முடியாது தொல்லை,
குழந்தைகள் படிக்க முடியாது,
ஆண்கள் வீட்டில் இருக்க முடியாது;

நல்லுறவு வீடுகளில்
நிலைக்க வேண்டுமானால்,

தொலைக் காட்சி நெடுந் தொடர்கள்
நிறுத்தப்பட வேண்டும் - திரிதல்
நிறுத்தப்பட வேண்டும்!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (17-Nov-11, 10:32 am)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 280

மேலே