எழுத்து
என்னை எனக்கே
கவிஞன் என்று
அறிமுகம் செய்தது
எழுத்து.காம்
ஏட்டில் கூட
எழுதி வைக்காத
என் கவிதைகளை
எழுதி வைத்தேன்
எழுத்து.காம் ல்
காகித பக்கங்கள்
இடமளிக்காத
என் கவிதைகளுக்கு
எழுத்தின் கவிதை பக்கம்
பல பக்கங்களை தந்தது
நித்தம் பல
கவிதை படைக்க வைத்து
சத்தமில்லாமல் என்னை
கவிஞன் ஆக்கியது
இங்கு கவி நண்பர்களின்
சில வரி வாழ்த்துக்கள்
என்னை பல வரிகள்
எழுத தூண்டியது
அரங்கேற்றம் காணாத
என் கவிதைகள்
அரங்கம் கண்டதும் இங்கேதான்
கவிதைக்காய்
முதல் பரிசு
பெற்றதும் இங்கேதான்
கவிதை தாகத்திற்கும்
தமிழ் மோகத்திற்கும்
களம் கண்டதும்
இளைப்பாற
இணைய தளம் கொண்டதும்
இங்கேதான்
என் எழுதுகோலுக்கும்
எண்ணங்களுக்கும்
இடையே சிக்கி கொண்ட
சில வார்த்தைகள்
உருவம் பெற்றது
உலா வந்தது எழுத்தில்
என்னை பாதித்த
பல நிகழ்வுகளை
பதித்து வைத்தேன் கவிதை என
எழுத்து.காம்
இது கவிதையின் முகவரி
பல கவிஞர்களுக்கும் முகவரி
கவி நண்பர்கள்
கூடும்
இணைய தள வேடந்தாங்கல்
தோழனென தோழியென
தோழமை பழகி
எழுத்து நண்பர்களாய் இணைந்தோம்
சில சந்திப்புகளில்
எழுத்தின் நினைவுகளை அசைபோட்டோம்
காதல் முதல்
அதன் தோல்வி வரை
வாழக்கை முதல்
அதன் அர்த்தம் சொல்லும்
நண்பர்கள் வரை
ஈழம் முதல்
அதன் வேள்வி வரை
கைக்கூ முதல்
கைபேசி வரை
நகைச்சுவை முதல்
சிறுகதை வரை
கொட்டிகிடகிறது கவிதையென இங்கே
வார்த்தைகள் இல்லை பாராட்ட
வலைத்தளம் கண்ட எழுத்து க்கு
தமிழ் பேசும் சொந்தங்களோடு
கவிதை மொழி பேசி
உலகெங்கும் என் கவிதைகளை
வலை தளத்தால் இணைத்தமைக்கு
நன்றிகள் பல எழுத்துவிற்க்கு.....