சும்மா... லவ் பண்ணலாம்..வாம்மா...

என்னை நினைக்க நினைக்க உனக்கு ரொம்ப பிடிக்கும்..
என்னை பிடிக்க பிடிக்க காதலும் பிறக்கும்..
அந்த காதல் வேண்டுமே.. காதலி..
அந்த காதலால் என்னை காதலி...
உன்னால் எனக்கு காதல் அறிமுகம் ஆனது.
உயிரில் அதிசய அணுக்கள் வேர் விட்டு படர்ந்தது..
அது என் எண்ணம் முழுதையும் உன்று உன்று தான் வளர்ந்தது..
கவிதை சுவைத்து வாழ்ந்து வருகிறேன்..
காதல் வரத்தை பெற்றிட துடிக்கிறேன்...
கருணை காட்ட மாட்டாயா..
உன் அன்பின் மழையில் நிதமும் குளித்து...
கவிதை ஈரம் தலையில் சுமந்து...
காதல் ஜலதோஷம் வந்ததே...
வெள்ளை காகிதமான என் மனதில்...
உன் ஓவியம் வரைந்து நான் வாழ்கிறேன்...
உன் மனதை வெள்ளை காகித மாக்கிடு..
எந்தன் ஓவியம் தீட்டிடு,,
வண்ண கலவை குழைத்து உயிரை கொடுத்து
உனக்குள் உலவ விடு.,.
உன் ஒவ்வொரு அணுவிலும் என் முகம் தெரிந்திடும்
கனவுக்குள் இறங்கிவிடு...
காதலிக்க தொடங்கிடு..
என்னை நினைக்க நினைக்க உனக்கு ரொம்ப பிடிக்கும்..
என்னை பிடிக்க பிடிக்க காதலும் பிறக்கும்..
அந்த காதல் வேண்டுமே.. காதலி..
அந்த காதலால் என்னை காதலி...