முநூற்று ஒன்று .....

இந்த தளத்தில்...
நானும் விதையாய் விழுந்தேன் ....

விருச்சமாய் எழ வில்லை என்றாலும் ...
சின்னசிறு அரும்பாய் ,,,

துளிர் விட்டேன் ....

நானும் ஓர் பூ தான் ...
புன்னகையை பூக்கிறேன்....

மணம் கொண்ட மலராக ...
உங்கள் மனம் சேரவில்லை என்றாலும் ....

என் மனம் தந்த ....
மல்லிகை வார்த்தைகளால் ....

தினம் தினம் கவிதைகளாக ...
பூக்கிறேன் இந்த தளத்தின் வழியாக !!!!

மூன்று நான்கு சொற்களே கிட்டாத ....
என்னையும் முநூற்று ஒன்றை ...

தொட வைத்த திறமை ....
இந்த தளத்தையே சேரும்.

எழுதியவர் : பூநிஷா (20-Nov-11, 1:49 am)
சேர்த்தது : cpoovendhiran
பார்வை : 241

மேலே