எப்படி சொல்வேன் அம்மா
குளிர்ந்த காற்று
குயில் ஓசைகேட்டு
தெளிந்த சாரல் மேலே பட
தலையணையை விட்டு
மெல்ல எழுவது போல
மகனே !
சத்தம் கேட்டு
நீ நடந்த கால் தடங்களை கடல் அலையில் தேடி பார்த்து நடக்க
மகனே என்ற வார்த்தைக்கு மறு வார்த்தை பேசதெரியாத
அந்த மழலை பருவத்தில் ஆசைகள் எப்படி சொல்லுவேன் அம்மா