அச்சம் தவிர்! நெஞ்சம் நிமிர்!

அச்சம் தவிர்த்திடல் வேண்டும் - அதில்
வீரம் விளைந்திடல் வேண்டும் .
நெஞ்சம் நிமிர்ந்து நின்றிடல் வேண்டும்-அதில்
உன் புகழ் பாரினில் நிலைத்திடல் வேண்டும் .

அன்று கொடியை காத்தது குமரனின் வீரம்,
எங்கள் நெஞ்சம் நிமிர்ந்தது வானின் உயரம் !
பாரதி கவிதையில் அச்சம் அகன்றது ,
காந்தியின் உறுதியில் நெஞ்சம் நிமிர்ந்தது.

அச்சம் கண்டு அரண்டுவிட்டால் ,
அந்நியன் அங்கே நுழைந்திடுவான்.
நெஞ்சம் துவண்டு வீழ்ந்துவிட்டால் ,
நெடுநாள் பகைவன் வீழ்த்திடுவான்.

அச்சம் இல்லாத சமுதாயம் வேண்டும் ;
தீவிரவாதம் அழிந்திடல் வேண்டும் .
உலகில் ஒற்றுமை ஓங்கிட வேண்டும்
எங்கும் அமைதி தவழ்ந்திட வேண்டும் .

பெண்களின் மானம் காத்திடல் வேண்டும் ;
அவர்களின் உரிமைகள் மதித்திடல் வேண்டும்.
என்றென்றும் வெற்றி நமதாக வேண்டும் ,
ஒ, மனிதா! அச்சம் தவிர்! நெஞ்சம் நிமிர்!..




எழுதியவர் : divyarajendran (21-Nov-11, 4:21 pm)
பார்வை : 698

மேலே