எழுத்து.காம் - சரஸ்வதியின் இருப்பிடம்...
என்னுள்ளே சிந்தனை எரிமலைகளை
வெடிக்க செய்தது இவ்விடமே...
என்னுள்ளே மழலை கவிஞன்
பிறந்துவிட்ட பிறப்பிடமே...
வருடங்கள் வீன்செய்தேன்,
இவ்விடத்தை நான் காணேன்...
எதிர்பாராமல் நுழைந்தேன்,
என் எண்ணம் நான் பகிர்ந்தேன்...
நான் அறியேன் என்
தலையெழுத்தை...
நான் அறிந்தது இணையத்தளத்தில்
இந்த எழுத்தை....
உன்னாலே (எழுத்து.காம்) உருவாவர்
இன்னும் பல வைரமுத்து...
தமிழ்மொழியை காக்கவந்த
நீயோ,
தமிழர்களின் பொதுசொத்து...
நட்சத்திரங்களான எங்களுக்கு
உன்வானில் இடம்தந்தாய்...
சோதிக்க பயந்த
என்னுடைய கருத்துகளையும்
யோசிக்காமல் நீயே ஏற்றாய்...
சரஸ்வதியின் இருப்பிடமும் இதுவே...
நீயே!!!
கவிதைகள் சங்கமிக்கும்
திரிகூடல் சங்கமமே...
வெண்மேகமாக இருந்த என்னை
கருமேகமாகசெய்து
கவிதை சாரல்களை தூரசெய்தாய்...
மலராத மலராக இருந்த என்னை
மலரவெய்து
கவிதை தேன்களை சுரக்க வெய்தாய்...
ஊர் அறியாத என்பெயரை,
பார் அறிய பரப்பிவிட்டாய்...
உன்னில் உள்ள கவிதைகள் அனைத்துமே,
தெவிட்டாத தேன்மிட்டாய்...
வாழ்க்கையில் சறுக்கல்கள் பலகண்ட
என்னுடைய கிறுக்கல்களை
மறுக்காமல் நீயே ஏற்றாய்...
படிக்க படிக்க தீராமல்
கவிதைகளை தருகிறாயே
நீயே கவிதை ஊற்றாய்....
பசு தன் முதல் கண்ணை ஈன்றதும்
தரும் சீம்பாலை ரசித்து சுவைத்தவர் பலருண்டு...
ஆனால்,
கவிஞன் ஒருவன் என்னுள் பிறந்ததும்
சீம்பால் போன்ற என்முதல் கவிதையை
நீயே ருசித்து சுவைகண்டாய்...
நீ வரைந்த பாதையில்
நான் இன்று செல்கிறேன்...
என்னை உன்னுள் ஏற்றமைக்கு
பலநூறு நன்றிகள் உமக்கு
உரித்தாக்கி கொள்கிறேன்...