டால்பின்கள் இரண்டு

மாலை நேரக் கடல்
சலனமற்று இருக்கிறது,
மேகம் கருத்திருக்கிறது,
மேற்கில் மறையும் கதிரவன்
கடற்பரப்பில் தகதகக்கிறது;

கதிரவன் ஒளியில்
ஆனந்தமாய்த் துள்ளி
விளையாடும்
டால்பின்கள் இரண்டு;
அவைகளின் உடலிலிருந்து
வழியும் நீர் வீழ்ச்சி,
காணக் கண்கொள்ளாக் காட்சி!

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (24-Nov-11, 9:51 pm)
பார்வை : 246

மேலே