தலைப்பு.......... ம்ம்ம் .... காதல் தானம்..

என் சுவாசமே.....

என் உயிரோட நீ கலந்திருந்தும்....
என் உயிர் மூச்சை புரிந்திருந்தும்..
என் உள்ளக்காதல் உணர்ந்திருந்தும்...

உன் மனதில் நான் இருப்பதை..
உன் உள்ளம் உன்னிடம் சொன்னாலும்...
அமைதி காக்கும் மர்மம் என்ன...

அமைதிக்கு பின் கடும் புயலோ....
உணர வைக்கிறாயே....
எனை உயிரோடு
உறைய வைக்கிறாயே...

அன்பே..

ரத்த தானம் கேட்டிருந்தால்..
என் குருதி முழுவதும்
கொடுத்திருப்பேன்..

கண் தானம் செய்ய சொல்லி இருந்தால்...
கடைசியாக உன்னை ஒரு முறை பார்த்துவிட்டு...
என் இரண்டு கண்ணையும்
இப்போவே கொடுத்திருப்பேன்..

ஏன் ?
இதய தானம் கேட்டிருந்தால் கூட ...
இயக்கம் நிறுத்தி தந்திருப்பேன் ...

எத்தைனையோ தானம் உலகில் இருக்க..
என் காதலை தானமாக கேட்குறீயே ?
மாட்டேன் அன்பே....
என்னால் முடியாது...
முடியவே முடியாது....
மன்னித்துவிடு....
ஆனால்...
மறந்து விடாதே....

எழுதியவர் : கலிபா சாஹிப் (24-Nov-11, 9:55 pm)
பார்வை : 450

மேலே