தமிழ்ப் பழமொழி - தலைக்கு வந்தது தலைப் பாகையோடு போனது

மஹாபாரதத்தில் அர்ஜுனன் தன்னுடைய வில் திறத்தால்தான் வெற்றி கிடைத்தது என்று நினைத்து வந்தான். ஒருதடவை கர்ணன் விட்ட பிரம்மாஸ்திரத்திலிருந்து அர்ஜுனனை கிருஷ்ணன் காப்பற்ற தேரின் கால் சக்கரத்தை நிலத்தில் புதையுமாறு கிருஷ்ணன் அழுத்தியதால்
அர்ஜுனனின் தலையை நோக்கி வந்த பிரம்மாஸ்திரம் அவனது தலைப்பாகையை மட்டும் பறித்துக்கொண்டு போனது. இத்தோடு அர்ஜுனனின் மமதையும் அழிந்தது.

இதிலிருந்தே இந்தப் பழமொழி வந்தது.

ஒரு பெரிய ஆபத்து வந்து அது சிறிய ஆபத்தாக மாறி அதிலிருந்து பிழைத்து்ககொண்டால் இப்பழமொழியை நாம் பயன் படுத்துகிறோம்.

எழுதியவர் : செ.சத்யாசெந்தில் (25-Nov-11, 12:34 pm)
சேர்த்தது : SathyaSenthil
பார்வை : 270

மேலே