கல்லுரி

காதலிக்கும் அவர்களுக்குள் வெட்கம் உண்டு
வெட்கப்பட விட்டதில்லை நண்பர்களுக்குள்.

ஒன்றிறண்டே காதலர்கள்
எப்படி எல்லோரும் நண்பர்களாய் ?

விதை நிலமாய் கல்லூரி
பாதராய் போவோமோ
பதற்றத்தில் ஆசிரியர் !
விதைத்து பார்த்தோம் நட்பை நாங்கள்
பதரே இல்லை விளைச்சலிலே !.

எத்தனையோ சறுக்கல்கள் வாழ்கையிலே
விழுந்ததெல்லாம் நண்பர்கள் மனதினிலே.

ஒருவன் மேலே போகையில்
வாய்மேல் வைத்து பர்க்கவில்லை(கையை),
கொடுத்து தூக்கி விட்டோம்.

அரட்டை அடித்த நண்பர்களுக்கு
அறுதல் சொல்லும் மனமும் உண்டு.

ஒருவர்க்கு இங்கு சோகம் என்றால்
அழுவதற்கு எத்தனை கண்கள்.

ஊட்டி வல்லர்தர்கள் பெற்றோர்கள்,
வளர்ந்து ஊட்டிக்கொண்டோம் எங்களுக்குள்.

எங்கள் பரிமாற்றம் ஏற்ற இறக்கம் கண்டதில்லை
மாற்றி கொண்டது அன்பு அதனால்.

எதிர் பார்த்து சேரும்
சொந்தங்களுக்கு தெரிவதில்லை
எதையும் எதிர் பாராமல் சேரும்
நட்பை பற்றி.

மறைத்து வைக்க நினைத்ததுண்டு
அவன் வருந்த கூடும் செய்திகளை.
மறந்தும் கூட நினைத்ததில்லை
அவன் வருந்த வேண்டும் செய்திகளை.

கருத்தினில் விரிசல் உண்டு.
எங்கள் நட்பினில் விரிசல் இல்லை.

எங்களுக்குள் ஏதும் இல்லை இரத்த பந்தம்,
அனாலும் மாமன் மச்சான்.

எழுதியவர் : balajirathinam (26-Nov-11, 3:12 pm)
Tanglish : kalluri
பார்வை : 619

மேலே