நட்பும் ஓர் பாடசாலைதான் ...

நண்பா ..!
தடுமாறும்போது கைகொடு .!
மனசுமையாகும்போது தோள்கொடு .!
தோல்வி நேரும் போது
ஊக்கம் கொடு .!
நல்ல நட்பால் வளமாகும் ..
நம் மனம் - அதில்
நல்சிந்தனையை வளர்த்து ..
சோர்வு எனும் களைபறித்து..
சாதனையை அறுவடை செய்ய ...
ஒரு லட்சிய தோழனாய் இரு ...
உனக்கு நானும்
எனக்கு நீயும்
உலகத்துக்கு நமது
வெற்றிகளும் - சொல்லுமே ..!
நட்பும் ஓர் பாடசாலை என்று...

எழுதியவர் : கே. அமுதா (26-Nov-11, 2:27 pm)
பார்வை : 524

மேலே