ஏன் படைத்தாய் இறைவா (பாவம் செய்கிறாய் "enkeyum eppothum "
![](https://eluthu.com/images/loading.gif)
கருவில் பிறந்த குழந்தை
பிறந்தவுடன் இறக்க செய்கிறாய்
தாயும், சேயும் செய்த பாவமா !
ஏன் படைத்தாய் இறைவா
அவன் பாவத்திற்காக வா !
இல்லை "நீ பாவம் செய்கிறாய் இறைவா"
தீய பழக்கம் இல்லாத ஒருவனை
தீக்கு இறையாகினாய் அன்று !
அவனும் அவன் குடும்பமும்
செய்த பாவமா
ஏன் படைத்தாய் இறைவா
அவன் பாவத்திற்காக வா !
இல்லை "நீ பாவம் செய்கிறாய் இறைவா"
எங்கேயும் எப்போதும் செல்லும்
கல்லூரி மாணவர்களை புரட்டி எடுத்தாய் இன்று
எத்தணை இதயங்கள் உடைந்தது !
எத்தணை உயிர்கள் பிரிந்தது
இவர்கள் எல்லோரும் பாவம் செய்தவர்களா
ஏன் படைத்தாய் இறைவா
அவர்கள் பாவத்திற்காக வா !
இல்லை "நீ பாவம் செய்கிறாய் இறைவா !
பல இதயங்களின் அழுகுரல்
இங்கே கேட்கிறது , ஆனால்
உனக்கு கேட்காது இறைவா !
ஏனென்றால் !
பாவம் துடைக்க வேண்டிய நீ
பாவம் சுமக்கிறாய் இறைவா
"எங்கேயும் எப்போதும் "
என்றும் அன்புடன் "நட்புக்காக"
இன்று மட்டும் "கண்ணிருடன்"