நிலா

காதலனுக்கு
காதலி முகம்
கவிஞனுக்கு
கவிதையின் கரு
விஞ்ஞானிக்கு
ஆராய்ச்சிப் பந்து
இயற்கைக்கு
இரவின் அடையாளம்
எனக்கு
ஏழைப் பெண்ணின்
உள்ளங்கையில் உலாவும்
ஒரு ரூபாய் நாணயம் !!!

எழுதியவர் : ஆண்டனி@சலோப்ரியன் (3-Dec-11, 2:52 pm)
சேர்த்தது : Paul Antony
Tanglish : nila
பார்வை : 222

மேலே