ஏழை விவசாயி...



அறுபத்தைந்தை கடந்துவிட்டேன்...

அறுவடைக்கு தயாரானேன்...

என் முக ரேகை போலே....

என் கழனி எங்கும் வறட்சி ரேகை....

சொல்லோனாத்துயரமங்கே.....

சொல்லிவிட ஏதுமில்லை....

ஏர் உழுது , ஏர் உழுது இளமைக்காலம் .....

தொலைத்தேனோ....

ஏற்றத்தில் நீரிறைத்த காலமெல்லாம் ....

இன்றிங்கில் இலையுதிர் காலமம்மா....

வருணபகவான் வாட்டுகிறான்....

வறுமையினை மீட்பானோ....

வான் மழை பொய்த்து போய் ...... பசியால்....

என் வயிறு சத்தம் போடுதிங்கே.....

காதிருந்தால் காலனே....

கனிவோடு அழைத்துக்கொள்.... காத்திருப்பு

பிடிக்கவில்லை....

காத்திருந்தால்.. வழியுமில்லை....

எழுதியவர் : காளிதாசன்... (6-Dec-11, 4:48 pm)
பார்வை : 233

மேலே