கண்டதும் கற்றதும்

அழகென்ற சொல்லுக்கொரு
பொருள்த்தேடி சென்றேன்
வழியெல்லாம் அழகோடு
பொருள் பலவும் கற்றேன்

இலை நுனியில் பனித்துளியை
கதிரெழும்ப கண்டேன்
அசைவற்ற உலகுமொரு
அழகென்று கற்றேன்

கார்மேகம் பொழிகின்ற
அடைமழையை கண்டேன்
தேக்கிய சோகத்தின் அழுகையும்
அழகென்று கற்றேன்

மடிகின்ற கதிரவனை
கடற்கரையில் கண்டேன்
முடியும்வரை உதவுவதும்
அழகென்று கற்றேன்

மதிமயக்கும் வளர்மதியை
வனொளிர கண்டேன்
எதிரொளிர்ந்து இருளழிப்பதும்
அழகென்று கற்றேன்

இதுவரையிலும் இவை அனைத்தும்
நிக்ழ்வென்று நினைத்தேன்
நிகழ்வில்லை மகிழ்வென்று
மனதினுள் விதைத்தேன்

-இயல் ரசிகன்

எழுதியவர் : (7-Dec-11, 6:35 am)
பார்வை : 332

மேலே