கவிதை வாழும்
ஏடெடுத்து எழுத்தாணியால்
எழுதிய காலத்திலும்
இலக்கியம் வாழ்ந்தது
தோலிலும் துணியிலும்
கல்வெட்டிலும்
இலக்கியம் வாழ்ந்தது
காகிதம் கண்டுபிடிக்கப் பட்டபின்
புத்தகங்களில் இலக்கியம்
வாழத் தொடங்கியது
இன்று எழுத்தும் இலக்கியமும்
இணையதளத்தில் வாழ்கிறது
இவையெல்லாம் இல்லாத
காலத்திலும் இலக்கியம் வாழ்ந்தது
வாக்கிலும் மனத்திலும்
ஒருவேளை எதிர்காலத்தில்
இவை அனைத்தும் இல்லாமல் போனாலும்
இலக்கியம் வாழும் கவிதை வாழும் இதயத்தில்
மானுடம் உள்ளவரை
மனித மனத்தில் வாழும்
----கவின் சாரலன்