ஓர் கனவு

கற்பனை உன்னிலும் உண்டு
கற்று தரும் திறனும் உண்டு
பிறப்பில் தாழ்தவன் நீ
சற்றும் விலகாத கற்பனை திறன் கொண்டவன் நீ
கடலும் , வானமும் முடியும் அந்த துரத்தை உன் கண்ணால் அளந்தவன் நீ
பெரிய பொருளையும் , உன் சுண்டு விரலால் மறைத்தவன் நீ
உன் தாய் , தந்தை பாதம் தொழுதவன் நீ
ஆசை ஏதும் கொள்ளாதவன் நீ
மனிதனாய் ஆசை படுபவன் நீ
கனவு கொள்ளும் போதும்
கற்பனை எனவே கனவு கனவுகனுவாய்
நிஜமாய் ஆகும் போதும் கனவெனவே நீயும் சுமப்பாய்
கர்ப்பபையில் நீ தரிக்கும் முன்னே
உன் அன்னை உனக்கென சில கனவு கண்டு இருப்பால் அந்த தெய்வம்
அவளுக்காக நீ ஒரு சிறு கனவு காணு !
அது போதும் அந்த தாய்க்கு
அவள் கனவும் உன் கனவாகவே இருக்க கூடும்

கனவு களைவு
உறக்கத்தில் தொலைவு
விழித்தால் மறைவு
நினைத்தால் உணர்வு
சந்தித்தால் சாதனை
முயன்றால் வெற்றி

கனவு தொல்லை அல்ல
ஓர் இன்பம், ஓர் புரிப்பு
சாதிக்கும் ஒருவன்
சிந்திக்கும் ஒருவன்
நேசிக்கும் ஒருவன்
யாசித்து கொண்டு இருப்பான் கனவை ....

எழுதியவர் : மணியான் (7-Dec-11, 2:44 pm)
Tanglish : or kanavu
பார்வை : 321

மேலே