நண்பா.................

அன்புள்ள நண்பனுக்கு !
ஆயிரம் வணக்கங்கள்

தினசரி ஒன்றை எடுத்துக்கொள் !

எவ்வாறு
இருக்கிறாய் ?

நலம் தானே !
நீயும் உன்
சுற்றத்தாரும் ?

என்ன நானா ?

ம் ! மூன்று வேளையும்
மூக்கு பிடிக்க தின்று விட்டு
கடை வீதியில் நடை பயில்கிறேன் !!

காலை பொழுதை
கனவு கண்டே
தொலைக்கிறேன் !!!

நிர்வாண குளியல்
நினைத்த போதெல்லாம் !!

இரவானால்
இழுத்து போர்த்தி
கொண்டு தூங்குகிறேன் !!

இப்போதெல்லாம்
வீட்டை கூட்டுவதற்கும்
மளிகை சாமான் வாங்கவும்
நான் தேவைப்படுகிறது
என் அம்மாவிற்கு !!

வேலை இல்லா பட்டதாரிகளில்
எண்ணிக்கை ஒன்று கூடி விட்டதாக
கவலை என் அப்பாவிற்கு

முன்பு வரை நன்றாய் பேசிய அண்ணன்
முகத்திற்கு நேராய் திட்டுகிறான் !!

எதிரே வரும் சில அறிவு ஜீவிகளின்
அட்வைஸ் தொல்லை !!
எங்கே வேலைக்கு போகிறாய்
என்று கேள்வி கேட்டவர்களின்
எண்ணிக்கை இதுவரை எட்டாயிரம் !!

இதற்கு இடையில் காதலியின்
செல் போன் சிணுங்கல்கள் !!

ஏதோ என் நேரம்
உருளுகிறது
உள்ளூர் நூலகத்தில் !!

அதற்கும் ஆனது ஆபத்து
மின் விசிறியின் அடியில்
மெய் மறந்து தூங்கியவனை
நூலகர் திட்டி ஆனது பெரும் ரகளை !!

எங்கேயும் போகாமல் வீட்டில் இருந்தால்
தங்கை ஷாம்பூ வாங்க அனுப்புகிறாள் !!

இவனும் என்னை போலத்தான்
என்கிறது என் வீட்டு நாயும் !!

உன் கதை என்னோவோ ??

என்ன ரெண்டும் ஒன்னு தானா !!

அபபிடியானால் வா
இருவரும் வேலைக்கு
செல்வோம் !!







எழுதியவர் : இளங்கோ.N (7-Dec-11, 3:14 pm)
Tanglish : nanbaa
பார்வை : 354

மேலே