ஒசாமா பின் லேடன்

வேலை முடிந்து இரவு நண்பர்களோடு உணவருந்த வந்தேன்,
முருகன் இட்லி கடைக்கு.
எப்போதும் போல தேர்க்கூட்டம்.
நின்று, பிறகு சர்வரை கவனித்து, சென்றோம்.
இது நில், கவனி, செல் மந்திரத்தின் வேறொரு பரிமாணம். மன்னித்து கொள்ளுங்கள்.

சென்று அமர்ந்து, வழக்கம்போல் ஆர்டர் செய்தோம் இட்லியை. வருவதற்கு வெகு நேரம் ஆகும் என்று தெரிந்தும் தேவுடு காத்தோம்.

எப்போதும் சுற்றுவது போல் சுழன்டது என் விழிகள். ஒரு இடம் வந்து கரு விழிகள் கல்லாகின. அசைத்து பார்க்க முடியவில்லை. யாரை பார்க்கிறது என் கண்கள் என்று யூகித்தால். எதிரே உள்ள இலந்தாரைகளை.

சரி பார்த்துவிட்டோமே என்று கண்களை திசை திருப்பி பார்கிறேன் முடியவில்லை. அந்த கூட்டத்தில் பல பெண்கள், அதில் ஒன்று என்னோடு ஓட்டுவாள் என்று எண்ணியது.

ஏன், எதற்கு, எப்படி புரியவில்லை. மனமின்றி மாற்றினேன் பார்வையை, இப்போது மனது மாட்டிவிட்டது போல்.

பார்த்த களைப்பில் இருக்கும் போது, வந்தது சூடான இட்லி, தொட்டு பார்த்தேன், சூடே தெரியவில்லை, கலர் சட்னியை நாக்கில் இட்டுப்பார்த்தேன், ருசியும் தெரியவில்லை.

ஒ! என்ன இது? இவள் தான் என்னவளோ? திரும்பவும் பார்த்தேன்.

இப்போது நான் (அதாவது ரூபன் அல்ல, கதாசிரியன்) எதிர் டேபிளுக்கு சென்று பார்கிறேன் என்ன நடக்கிறதென்று.

இளம் கண்ணிகள், இனிக்க, இனிக்க பேசிக்கொன்டிருகிரார்கள் காரச் சட்னியை தொட்டுக்கொண்டே. இதில் அஞ்சலி தான் கதையின் நாயகி, ஆகவே நீங்கள் கவனிக்க வேண்டிய முக்கியமான கதாபாத்திரம்.

எங்கு சென்றாலும் கூட்டதோடே செல்வாள், அதுவும் இடப்புறம், வலப்புறம் இணை பிரியா தோழிகளோடு மட்டுமே காட்சியளிப்பாள்.

இனி அஞ்சலி பேசுகிறாள்.....

வேலை சென்று வந்த களைப்பு, இட்லி சுவைத்துக்கொண்டே, சுற்றி பார்த்தால், கண்கள் காந்தம் பார்த்த இரும்பு போல உறைந்து நின்றன, பிறகு நங்கூரம் போட்டன, ரூபனை பார்த்து. மனது மோட்டார் பூட்டிய போட்டு போல் விசிறி விசிறி அடித்து, பின்பு அமைதியானது.

கண்கள் எடுக்காமல் பார்க்கிறாள்,
அவனும் பார்கிறான், சில நொடிகளில்,
அவன் பார்வை அவளை நேர் கொண்டு பார்க்க மறுக்கிறது,
பிறகு அஞ்சலியிடம் வந்தது, பிறகு வேறு பக்கம்,
பிறகு அஞ்சலியிடம், பிறகு வேறு பக்கம்,
பிறகு அஞ்சலியிடம், இந்த விளையாட்டை விளையாட முடியாமல் தவித்தாள், பின்பு சுவைத்தால் புளிசட்டினியோடு.

இருவரும் டின்னெர் முடித்து வெளியே வந்து, பார்வை பரிமாறிக்கொண்டனர், இப்போதும், ரூபன் பாதியிலேயே பார்வையை இடம்மாற்றினான். பையனாக இருந்து இப்படியா வெட்கபடுறது என்று எண்ணிக்கொண்டே நகர்ந்தாள்.

இனி ரூபன் படும் பாடு...........
படுத்து பார்கிறேன், பொரட்டி போட்டது அவள் நினைவு.
இது பசலையோ, இல்லை வயசின் விசமமோ, தெரியாமல் தவிக்கிறேன்.

இரவு 12 மணி தொடும்போது, முடிவு செய்துவிட்டேன் இவளை காதலிப்பேன் என்று, முடிந்தால் திருமணமும்.

உடனே பார்க்கணும் போல் தோன்றிற்று, அட்லீஸ்ட் காதலி நின்ற இடத்தையாவது. முடிவு செய்து காலாற நடந்தேன், தி நகர் மேன்சனிலிருந்து.

பஸ் ஸ்டாண்டில் இரண்டு போலீஸ் தடியோடு தவமிருக்கின்றனர். எனக்கோ பயம் தொற்றிக்கொண்டது, நடுக்கத்தை அடக்கி, கடக்க முயன்றேன்.

ஏய் தம்பி மணி என்னாச்சு என்றான் ஒரு போலீஸ்?
பன்னிரண்டு அடிச்சாச்சு என்றேன்.
பரதேசி நாயி,
என்ன பண்றான் பாரு, அந்த
மரத்துக்கு கீழ நின்றுன்னு குரல் கொடுத்துகொண்டே சென்றனர்,
வேறொரு நாயை பார்த்து.

எனக்கோ உயிர் மீண்டும் வந்தது. இட்லி கடை வாசல் வந்து, காதலி நின்ற இடம் கண்டு மெய் சிலிர்த்தேன். பிறகு சில சினிமா டூயட் களை நினைத்து பார்த்து, திரும்ப நினைக்கும் போது, ஒரு குரல்... என்னப்பா வாழை பழம் வேணாமா தம்பி ? என்றான். இரண்டு தாறும் என்று, ஒன்றை தின்று, மற்றொன்றை என்னவள் தின்கிறாள் என்று சொல்லிக்கொண்டே தின்றேன், ரூம் வந்தடைந்தேன்.

இதே போல் இட்லி, பார்வை பரிமாற்றம், இரவு, வாழைப்பழம் என்று மூன்று வாரம் ஓடியது. இன்று முடிவு செய்து, சொல்ல நினைத்து, அஞ்சலியை நெருங்கினேன், அதே இட்லி கடையில்.

என்னை பார்த்த அஞ்சலி, பதரி எழுந்து நின்றாள், திரும்பவும் என் பார்வை திசை மாறியது.
சொல்லுங்க என்னவேணும்? என்றாள்.
ஒண்ணுமில்ல, உங்க கிட்ட கொஞ்சம் பேசனும்.
எப்போ?
இப்போவே.
எதப்பத்தி?
என் வாழ்க்கை பத்தி, என் விருப்பம் பத்தி, என் வியாதி பத்தி.
ஹலோ, ஹலோ, நிறுத்துங்கோ! எங்கிட்ட ஏன் இதெல்லாம் சொல்லணும்?
சொல்லக்கூடாது தான், தப்புன்னு தெரியுது, ஆனா வேறு வழியில்லை.
சரி சொல்லுங்கோ.
இங்க வேண்டாம், வெளியே மரத்தடியில், இன்னும் பத்து நிமிஷம் கழித்து என்று நகர்ந்தான்.

அஞ்சலி மனதில் இருந்ததை, ரூபன் உடைத்துவிட்டாதாய் உணர்ந்தாள். சந்தோசப் பட்டாள். பத்து நிமிசமும் பப்ளிக் எக்ஸாம் போல தோன்றிற்று.

மரத்தடியில் ரூபன், காய்ந்த இலைகளை வருடிக் கொண்டிருக்கிறான். அருகில் வந்த அஞ்சலி....
சொல்லுங்க...
ம்ம்ம் என் பேரு ரூபன்.
ஓகே, என் பேரு அஞ்சலி,
தெரியும்.
எப்படி?
கூட்ட்டத்தில் எல்லோரும் பாதி நேரம் அஞ்சலி புராணம் பாடுவது புரியும்.
சிரிப்பை அடகிக்கொண்டே, சரி சொல்லுங்கோ என்றாள்..
சுமார் மூணு வாரமா இங்க வரேன், பார்கிறேன், பூரிக்கிறேன், எப்படி சொல்லுரதென்றே தெரியல. நான் காதலிகிறேன்னு நினைக்கிறன், அழகான முகம், அல்லவைக்கும் சிரிப்பு, விரசமில்லா விழிகள் எனக்கு பிடிச்சிருக்கு.
சோ, சரின்னா கல்யாணம் கூட பண்ணிக்கு வீங்கலோ?

கண்டிப்பா, எனக்கு ஓகே தான்.
சாதி மதம் பிரச்னை இல்லியா?

"சாதி பாக்காத சாதி எங்க சாதி,
மதம்பிடிக்காத மனிதர்கள் நாங்கள்"
அதனால எந்த சாதினாலும் ஒத்துக்கொள்வேன். நீங்க ஒத்துழைச்சா, கைபிடுச்சிடுவேன்.

ம்ம்ம்ம், யோசிகனுங்க.

"ஏன் நான் அழகாயில்லியா?
வார்த்தைகள் தெளிவா வரலியா?
நினைவுகள் நிலையா இல்லியா?"சொல்?

என்னங்க பாரதி போல பாயுறீங்க, கொஞ்சம் அவகாசம் கொடுங்க.

சரி, நான் வெயிட் பண்ணுறேன், ஆனா, இப்போதைக்கு
பேரு மட்டும் தெரிஞ்சுக்கலாமா, ப்ளீஸ்?

ம்ம்ம்ம் அஞ்சலி, அதுக்குள்ளே மறந்துடீங்களா?

உங்க பேரு இல்லீங்க,
கறுப்பா, கலையா, கருப்பு அங்கி போட்டிட்டு இருப்பாங்களே,
உங்க முஸ்லிம் பிரெண்ட் பேருங்க?

ம்ம்ம்ம் ஒசாமா பின் லேடன்!!!!!!!!!!!!!!

எழுதியவர் : கணேஷ்குமார் Balu (11-Dec-11, 4:44 am)
பார்வை : 667

மேலே