நீ, நான், காதல்..!!!

நம் நெருங்கிய நண்பர்களின்
காதல் தோல்வியடைந்த கணத்த
செய்திகளை கேட்க்கும்போழுதேல்லாம்
அவசர அவசரமாய்
சந்தித்து கொள்கிறோம்
நீயும் நானும்...

வெகு நேரமாய்,வேறு விஷயங்களை
அமர்ந்து பேசி
பின், புறப்பட்டு போகும்
தருணம் வரை
கேட்க நினைத்தும்
நம் காதலின் மேல்
உள்ள நம்பிக்கையில்
நாம் இருவருமே
கேட்டுக்கொள்ளாமல் போகும்
வார்த்தை..
"நீயும் என்ன விட்டு போயிட மாட்டியே"

எழுதியவர் : JAISEE (26-Aug-10, 8:17 pm)
சேர்த்தது : ஜெய்ஸி
பார்வை : 451

மேலே