என் உடன் பிறவா உடன் பிறப்பே!!!...
எங்கோ பிறந்தோம்...
எங்கோ வளர்ந்தோம்...
சிறு சிறு ஓடை போல்...
படிப்பு என்னும் படகு தான்
கடலெனும் கல்லூரியில் சேர்த்ததோ...
அன்பெனும் முத்தெடுக்க!!!...
பிரபலமான பெயர் பெற்ற
கல்லூரி நமது...
அதன் பெயரை
ஒவ்வொரு முறை கேட்கும் பொழுதும்...
உந்தன் பெயர் மட்டுமே
மனக்கண்ணில் துள்ளி ஓடும்!!!...
எங்கே பார்த்தோம்???...
எப்படிப் பேசினோம்???...
என நானறியேன்...
ஆனால்...
நம் நண்பர்கள் நம்மைப் பற்றி பேசினர்
இவர்கள் உடன் பிறவா
அண்ணன் தங்கை என!!!...
நம் உறவிற்கு பெருமை சேர்க்க
வேறெதுவும் உண்டோ?!!!...
உன்னைக் காணும் வேளையிலே
என் மனதின் ஓரம்
இனம்புரியா சந்தோஷம்...
எதையோ சாதித்து விட்டதைப் போல்
மனம் இறக்கை கட்டிப் பறக்கும் விண்ணிலே!!!...
உன் அண்ணன் போகிறார் என
தோழிகள் காதருகே கிசுகிசுக்க...
ஒரு நிமிடம் கண்கள் அலைபாய்ந்து ஓயும்!!!...
உன்னைக் கண்டு விட்டாலோ
என் இதழ்கள்
புன்னகைப் பூவை உதிர்த்து மலரும்!!!...
உன்னை காணாத தருணங்களில்
மலர்ந்த என் முகமும்
வாடிய மலராய் சோகத்தை உதிர்க்கும்!!!...
சில சமயம் என் மனது
உன்னைக் காண துடிக்கும்...
மனதின் ஓசை அடங்கும் முன்பே
கண்ணிற்கு முன்னே
உன் பிம்பம் நிழலாடும்
ஒரு புன்னகைப் பூவினை உதிர்த்து!!!...
உன்னிடம் பேச நினைக்கும் வேளை
உன் தொலைபேசி மணியோசை...
என் மனதின் ஓசையை
யார் வந்து சொன்னதோ
இத்தனை விரைவில்??!!!...
சின்ன சின்ன சண்டை
செல்லமாய் ஒரு கோபம்...
இதைக் காணும் நம் தோழி
எள்ளி நகையாடுவாள்...
சிறு பிள்ளைத்தனமா இல்லையா என!!!...
பரீட்ச்சைக்கு நான் செல்லும் வேளை
பரபரப்பாய் நீ?!...
நூறு முறை வாழ்த்துவாய்...
ஒரு முறை நான்
நன்றாக பரீட்சை எழுத!!!...
சின்ன சின்ன ஆசைகளை
சிரத்தை கொண்டு நீ முடிப்பாய்...
நான் ஆசை கொண்ட
ஒரே காரணத்திற்காக!!!...
உதவி என நான் நிற்க...
கேக்காமலே உதவிக்கரம்
நீ கொடுப்பாய்...
படிப்பு என வந்துவிட்டால்
சந்தேகங்களை நீ உடைப்பாய்!!!...
தவறில்லா தவறொன்றை
நீ செய்து விட்டால்
என்னிடமிருந்து தப்பிக்க விழிப்பாய்...
அதைக் காணும் நானோ
பக்கம் பக்கமாய் வசனம் பேச
பக்குவமாய் நீ நிற்பாய்!!!...
நம்மை அறியாத யாரோ
யாரென்று என்னைப் பார்த்து கேட்க...
"ஜூனியர்" என நீ சொல்லி விட்டால்...
என் மௌனம்
ஒரு ருத்ரதாண்டவமே ஆடும்!!!...
எதிர்பாரத வேளை
தங்கை என நீ அழைக்க...
மெய்சிலிர்த்து நிற்பேன்!!!...
என் உடன்பிறப்பு உடனிருக்க
உடன் பிறவா உன்னையும்
உடனிருந்து அழைத்துச் செல்வேன்!!!...
நாம் சென்ற பேருந்து
நம் அன்பினை தாங்கிச் செல்லும்...
பேருந்து நிறுத்தம்
நம் கதையை பல வருடம் சொல்லும்!!!...
நிரந்தரமற்ற கல்லூரி நாட்கள்
நிரந்தரமாய் முடிய...
பிரிவின் வலியோ
துளி கூட இல்லை!!!...
முற்று பெறும் அன்பிற்கு தான்
பிரிவின் வலியே தவிர...
தொடரும் நம் அன்பிற்கு இல்லை!!!...
நம் நட்பின் பயணங்கள் முடிவதில்லை...
நம் அன்பைப் போல் தொடர் கதையாய்!!!...
பல்லாண்டு நீ வாழ்க...
என் உடன் பிறவா உடன் பிறப்பே!!!...
-ப்ரியமுடன்
நிலா தோழி...