உயிர் உறங்கி விட...

நிமிடம் தோறும் வேண்டுகிறேன்
நீ என்னை நினைக்க அல்ல,
நான் உன்னை மறக்க...

முப்பொழுதும் தொழுகிறேன்
நீ என்னைச் சேர அல்ல,
நான் உன்னை விலக...

அனுதினமும் பிரார்த்திக்கிறேன்
உன்னோடு உயிர் வாழ அல்ல,
என் உயிர் உறங்கி விட...

எழுதியவர் : பிரின்சஸ் தென்றல் (28-Dec-11, 9:27 am)
Tanglish : uyir urangi vida
பார்வை : 355

மேலே