நில்லடி என் கண்மணி !!! சொல்லடி இது நியாயமா ???

தென்றலாய் நீயும் வந்தாய் ...
புயலாய் என் மனதைத் தாக்க ...
பூவாக நீயும் வந்தாய் ...
முள்ளாய் என் மனதை தைக்க ...

நில்லடி என் கண்மணி !!!
சொல்லடி இது நியாயமா ???

உன்னோடு நானிருந்த நிமிடங்கள் மட்டும்
என் கடிகார முட்களில் உறைகின்றதே ...
உன்னோடு நான் பேசிய வார்த்தைகள் மட்டும்
என் அகராதி முழுவதும் நிறைகின்றதே ...

நில்லடி என் கண்மணி !!!
சொல்லடி இது நியாயமா ???

நீரோடும் நெருப்போடும் விளையாடிய என்னை
சிறு பூவோடும் இலையோடும் பேசவைத்தாய் ...
பாறைகள் நிறைந்த என் பாதையை
பனிப்பூக்களால் நிரப்பிவைத்தாய் ...

நில்லடி என் கண்மணி !!!
சொல்லடி இது நியாயமா ???

யாரோடும் பேசாத எனை நீயும்தான்
இன்று தனியாக பேச வைத்தாய் ...
காற்றோடு கலந்திட்ட உன் வாசனை
என் உயிர்மூசிலும் நிறைகின்றதே ...

நில்லடி என் கண்மணி !!!
சொல்லடி இது நியாயமா ???

கனவோடும் நினைவோடும் உன் ஞாபகம்
என்னை கொல்லாமல் கொல்கின்றதே ...
என் உலகத்தை அழகாகத் தோன்றவைத்தாய்
நீயில்லா தனி உலகத்தில் விட்டும்சென்றாய் ...

நில்லடி என் கண்மணி !!!
சொல்லடி இது நியாயமா ???

உனக்காக நான் பறித்த மலர்களெல்லாம்
உன் கல்லறையை அலங்கரிகவோ ?!?
வசந்தமாய் என் வாழ்வில் வந்தாய் ...
இன்று வறண்ட நிலமாக மாற்றிச்சென்றாய் !!!
ஆறுதலாய் என் வாழ்வில் வந்தாய் ...
என்றும் அழியாத வலியும் தந்தாய் !!!

ஏனடி விட்டுச்சென்றாய் காரணம் சொல்லாமலே ...
தண்டனைதான் உனக்கு தரவேண்டுமென்றால்
இவ்வலியை நான் தருவேன் உன் அடுத்த ஜென்மத்தில் !!!!

-அமலா

எழுதியவர் : amala (28-Dec-11, 10:31 pm)
பார்வை : 267

மேலே