எது காதல்....
முந்நாளில் சந்தோஷம் தந்து
பின்நாளில் சோகம்
தருவதுதான் காதலா.....
ஒருமுறை மனதை திருடி
பலமுறை உயிரை திருடும்
மாய உலகம் தான் காதலா.....
விழியோடு விளையாடி
மனதோடு போராடும்
வினோத விளையாட்டு தான் காதலா....
விடைசொல் உறவே...
விடை பெறட்டும் உயிரே....