உன்னவளாய் காத்திருப்பேன் என் உயிருள்ள காலம் வரை............!!

நீ என்னை நேசித்தபோது
எழுந்த கவிதைகள்
வார்த்தையின் ஜாலங்களில் சிக்கி
வெளிவரத் தவித்தது
அனாலும் முடியவில்லை
உன் இனிமை நிறைந்த
செல்லப் பெயரைத்தவிர
கவிதையாய் என் நாவின் உச்சரிப்பில்......

இன்று
நீ என்னை வெறுத்தபோது
எழுந்த கவிதைகள்
என் கண்ணீரில் கரைந்து
கன்னம் வழி வழிந்தோடி
என் நெஞ்சத்தில் உன்
எண்ணத்தை அழித்திட
துடித்தது......

மாறாத இன்பங்கள்
ஆறாத துயரங்கள்
அத்தனைக்கும் சொந்தக்காரன்
நீ
என்று உன்னை திட்டி
வெறுத்திட முடியாது
தவிக்கின்றேன் நான்
அணலிடை பட்ட விட்டில் போல.........

காதலின் இன்பத்தை உச்சமாய் கண்டவள்
என் பூரித்த என்மனதிற்கு
துன்பத்தின் சிகரம் தொட்டவள் நீயடி
என உணர்த்தியவனே

இன்றும் காதல் செய்கிறது உன்னை
என் ஊமை மனது........
புரியும் காலம் உண்டெனில்
மீண்டும் வா அன்பே
உன்னவளாய் காத்திருப்பேன்
என்
உயிருள்ள காலம் வரை............!!

எழுதியவர் : அம்மு..... (30-Dec-11, 9:23 pm)
பார்வை : 436

மேலே