புத்தாண்டே போர்க்கோலம் பூண்
புத்தாண்டே! வா புறப்படு
அநீதிக்கு எதிராய் போரிடு
போர்க்கோலம் பூண்
மொட்டாய் இருந்தது போதும்
மலர்ந்திடு மணம் வீசிடு
வண்டுகள் வாழ வழி விடு
அந்நியனின் கைப்பாவைகளை
அகற்றிட துரத்திட
வண்டுகளுக்கு
தேனோடு புறநாநூற்றைக்
கலந்து கொடு
புத்தாண்டே!......
இனியொரு சுதந்திரம் செய்
இனிதாய் மக்கள் வாழ்ந்திடவே !.........