புத்தாண்டு வாழ்த்துகள் ! ( 2 01 2 )

எல்லோருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள் !
நண்பருக்கும், உறவுக்கும்,
நாளைய தளிர்களுக்கும்,
வேலையில்லா இளைஞர்களுக்கும்,
வேலையால் பளு சுமந்து அலையும்
ஊழியர்க்கும், இல்லத்து சாம்ராஜ்ய அரசப்
பெண்களுக்கும், என் கண்களை
விட்டகலா தாய். தந்தை, உடன்பிறப்புகள்
மற்றும் என் இல்லம் ஜொலிக்கும் மனைவி ,
மக்கள் என்னும் குடும்ப விளக்குகளுக்கும்,
என்னை மறந்த மனிதர்களுக்கும் , நான் மறந்த புனிதர்களுக்கும்,
எங்களை ஆள்பவருக்கும், ஆண்டவர்களுக்கும்,
இந்த உலகின் உயர்திணை மற்றும் அஹ்ரிணை
உயிர்களுக்கும்,
ஒரு செல் முதல் இரு கால்களால்
நடந்து செல்லும் அவதாரங்களுக்கும் இந்த உலகில் நான் ஒரு மனிதன் என்ற முறையில் புத்தாண்டு வாழ்த்துகள் வாழ்த்துகள்
பூரிப்புடன் சமர்ப்பிகின்றேன்!

எழுதியவர் : முத்து நாடன் (31-Dec-11, 8:43 pm)
பார்வை : 462

மேலே