எழுத்து நண்பர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்...
அன்பு பெருகி
ஆணவம் அழித்து
இன்பம் நிறைந்து
ஈகையில் சிறந்து
உண்மை மலர்ந்து
ஊக்கத்தால் சிறந்து
என்றும் வளமுடன்
ஏற்றமாய் வாழ்ந்து
ஐயம் தெளிந்து
ஒற்றுமை தினம்
ஓங்கி வளர்ந்து
ஔவண்ணமே வாழ
நட்புடன் நாளும் நடைபோட,
என் அன்பான புத்தாண்டு வாழ்த்துக்கள்...