வாகை சூடுவோம்
நேற்றைய கவலைகள்
இன்று இல்லை
இன்றைய கவலைகள்
நாளை இல்லை
நாளைய கவலைகள்
நேற்றவையுமல்ல
இன்றவையுமல்ல ஆனாலும்
கவலைகள் இல்லாமல் இல்லை
கவனமுடன் கவலை
வலை அறுப்போம்
புத்தாண்டை வரவேற்போம்
முல்லையும் நம் எல்லையுள்
எல்லாமும் கைகூடும் நாளை
தமிழகம் வாகை சூடும்