நட்பென்ற மயிலிறகால்...!
சொந்தங்கள் நூறு உண்டு
சொல்லும்படி யாரும் இல்லை...
இன்பங்கள் வந்தபோது.....
இளித்தபடி வந்த சொந்தம்
இப்போது என்னருகே இல்லை..!
ஏன் என்று சொல்லவா...?
கடும் கல் பாறையாய்
கண் எதிரே கவலைகள்...!
உயிர் நண்பன் - உடனேயே
உளி ஆனான் என் நினைவில்...
உடைக்கத்தான் கவலை அடித்தேன்...
உருவானதோர் நட்பென்ற சிலை..!
உன்னாலே நண்பனே நான்
உயிர்வாழ்கிறேன் உவகையாலே...!
உண்மையை சொல்கிறேன் என்
உயிர் சொந்தம் நீ ஒருவனடா...!
புது பொலிவு நீ பெறவே என்
புத்தாண்டு வாழ்த்துனக்கு........
புல்லரிக்க வைக்கின்றாய்....
நட்பென்ற மயிலிறகால்...!