குழந்தை மனம்

ஸ்கூட்டி பெப்பில்....
அம்மாவை கட்டி அணைத்தபடி...
ஸ்கூலுக்கு வரும் சுஷ்மிதா..!

என்னிடம் மட்டும் சொல்கிறாள்
என் அம்மா...!
சுஷ்மிதாவை போல் பர்ஸ்ட் ரேங்க்
வாங்கணும்..! என்று....!
நான் யாரிடம்...? சொல்ல...!
பெப்பில் கொண்டு விடு.. என்று?

சுஷ்மிதா சேராத....!
ப்ராக் ரேஸில் நான் தான் பர்ஸ்ட்
டிராயிங்கில் பர்ஸ்ட்
திருக்குறள் எலோகசனில் செகண்ட்

ஆனாலும்...?
என்னிடம் மட்டும் சொல்கிறாள்
என் அம்மா...?
சுஷ்மிதாவை போல் பர்ஸ்ட் ரேங்க்
வாங்கணும்..! என்று....!

டூ வீலரில் போகும்போது...!
லெப்ட் சைட் டேன்...! ரைட் சைட் டேன்...!
ஸ்கூல் சூன்..! நேரோ பிரிட்ஜ்....!
டிராபிக் ரூல்ஸ்…அப்பா சொல்ல....!
நானும் சொன்னேன்...?

யூஸ் சீப்ரா கிராஸிங்..
டு கிராஸ் த ரோட்...!
அப்பாவும் ஆச்சரியத்தோடு சிரிக்க..
என்னிடம் மட்டும் சொல்கிறாள்
என் அம்மா...?
சுஷ்மிதாவை போல் பர்ஸ்ட் ரேங்க்
வாங்கணும்..!என்று....!

அய்யோ...!இந்த கல்யாண வீட்டுக்கு போயிட்டா...?
இது யாரு? உன் மகளா...?
என்ன படிக்கிறா..? என்ன ரேங்க்...?
ஐந்தாவது ரேங்க்...! என்
அம்மாவின் பதிலில்...
பர்ஸ்ட் ரேங்க்க்க்.....! இல்லையாயா…...?

கிளாஸ் ரூமில் மிஸ் சொல்றாங்க..
பிக்கஸ்ட் நம்பர் பைவ் என்று...?
ஆனாலும்...?
என்னிடம் மட்டும் சொல்கிறாள்
என் அம்மா...?
சுஷ்மிதாவை போல் பர்ஸ்ட் ரேங்க்
வாங்கணும்..! என்று....!

ரிப்போட் கார்டு கொடுத்து...
எல்லா ஆன்டியிடமும்....
மிஸ் சொல்றாங்க....?
கொஞ்சம் ஹார்டுவொர்க் பண்ணுங்க...
பர்ஸ்ட் ரேங்க் ...! வாங்கிடுவா...!

அய்யோ...!அய்யோ...!
பர்ஸ்ட் ரேங்க் எல்லோரும் வாங்கிட்டா...
செகண்ட் ரேங்க் யார்..? வாங்க..!
வடிவேல் அங்கிள் சொன்னமாதிரி...
சின்ன புள்ள தனமால்ல இருக்கு...!

எழுதியவர் : மீரா ஆதிரை (2-Jan-12, 9:51 pm)
பார்வை : 379

சிறந்த கவிதைகள்

மேலே