நடிகை...

காவியம் எழுத தோன்றுதடி...
ஓவியமே உன்னை கண்டதால்...

நடமாடும் பிணமானேன்...
நடிகையே நீ என்னை கடந்ததால்...

ஆயிரம் கண்களும் போதாது...
அழகியே உந்தன் அசைவை காண்பதற்கு...

தந்தையின் உதைகூட வலிக்கவில்லை...
தேவதையே உன் இடை கொஞ்சம் கண்டதால்...

அணிகலன்களை அணியவில்லை உன்னுடைய மேனி...
இந்நாட்டிற்கு என்றுமே நீதானே ராணி...

பல நாட்கள் காணவில்லை பெரியதிரையில் உன்னை...
கிரகணம் முடிந்த சூரியன்போல் மறுபடி தோன்றி அழகு சேர்த்தாய் இந்த விண்ணை...

திருமணம் ஆனாலும் உன்னை பிடித்தோர் பலர்...
பவழமே நீயே என்றும் வாடாத புது மலர்...

எழுதியவர் : பாலாஜி (4-Jan-12, 4:15 pm)
பார்வை : 273

மேலே