ஒரு நவரச நாடகம்
மன்றம் பொலிந்து வந்த
மதுரை தமிழ் மெல்ல
மௌனம் கலைத்திடும்
செவ்விதழில் புன்னகையில்
தென்றல் வீசிடும்
கண்களிரண்டில் கயல்கள் துள்ளும்
காதல் திரை விரியும்
கன்னத்தில் அந்தி சிவக்கும்
கலைந்து வந்து கார்முகில் கூந்தல் காற்றில் ஆடும்
உன் அழகுத் திருமுகத்தில்
ஒரு நவரச நாடகம் அரங்கேறும்
---கவின் சாரலன்