உயர்ந்த உள்ளம்
சாருவிற்கு மனது நொந்து பொய் விட்டது. ஆம் அண்ணனின் இந்த போக்கு கொஞ்சம் கூட பிடிக்கவில்லைதான்...
கொஞ்ச நாட்களாக தன் மகள் ஷோபாவுடன் சாருவின் மகன் கண்ணனனுடன் பழகுவதை அண்ணன் குமார் தவிர்ப்பதை எண்ணி சாரு எண்ணி மிகவும் வேதனை அடைந்தாள்.
சிறுவயதில் ஷோபா கண்ணனுக்குத்தான் திருமணம் முடிக்க வேண்டும் என்று வார்த்தைக்கு வார்த்தை பேசும் குமாரின் போக்கு இப்படி இருப்பதை எண்ணி எண்ணி பொறுக்கமுடியாமல் குமாரிடமே கேட்டு விட்டாள்...
அண்ணா ஏன் இப்போவெல்லாம் ஷோபாவை கண்ணனோட பேசரதையே தவிர்க்கிறீர்கள் ...நாங்கள் என்ன அப்படியா தகுதியில் குறைந்து விட்டோம்' என்று கொஞ்சம் கோபமாக கோபித்து கொண்டாள்...
சாருவின் கோபத்தை உணர்ந்த கண்ணன் அமைதி ஆனான்...ஆனால் என்ன பேசுவதென்றே தெரியவில்லை...
'ஷோபாவை எங்கே கண்ணனுக்கு திருமணம் முடிக்கணுமே என்ற எண்ணத்தில்தான் இப்படி பேசுறீங்களா' என்ற சாருவின் ஆதங்கத்தை கண்ட குமார் பேச ஆரம்பித்தான்...
அப்படியெல்லாம் இல்ல சாரு...சின்ன வயசிலே ரெண்டு பெரும் விளையாடினது ஒன்னும் தப்பில்லே... நாமலும் ரெண்டு பேருக்கும் திருமணம் முடிக்கணும்னு பேசி வச்சிரிக்கோம் ...
ஆனா ரெண்டு பேரையும் இன்னும் கொஞ்ச காலம் ஒண்ணா பேச விட்டோம்னா..அவங்க ரெண்டு பேருக்கும் பாசம் தான் வரும் ...மனசில கல்யாணம் பண்ணனும் என்ற எண்ணம் வராது ...அப்புரம் நாம நினைத்தது நடக்காம போய்டுமே என்ற பயத்தில்தான் அப்படி நடந்துக்கிறேன்....எப்போவோம தூர இருந்தான் ஒரு சுவாரசியம் இருக்கும்...கிட்ட வந்தா முட்ட பகையாகி நாம நினைச்சது நடக்காம போடும் இல்லையா?...என்று அனைத்தையும் கொட்டி தீர்த்தான் குமார் தன் தங்கையை பார்த்தான்...
சாரு அண்ணனின் பாசமும் அக்கறையும் தெரியாமல் இப்படி நடந்துகிட்டோமே என்று வெட்கி தலை குனிந்தாள்...அண்ணனின் உயர்ந்த உள்ளத்தை எண்ணி பெருமிதம் அடைந்தாள் சாரு .