கொர்..பூர்..டர்... குறட்டை..

என் நண்பனின் நித்திரை சிரிப்பொலி..
என் இரவு தூக்கத்தின் கேள்விகுறி..
கொடுத்தவன் நீ ஆழ்ந்திருக்க !!!
கேட்டவன் நான் உறக்கத்தை தொலைத்து இருக்க !!!
இரவு முழுவதும் உன் சிம்பொனி கேட்க முடியவில்லை நண்பா..

யோசித்ததின் விளைவு...உதித்தது இந்த க(வி)தை..

பார்க்க முடியாத உனக்கு யார் பெயர் வைத்தாரோ குறட்டை என்று..
"ரா" ணாவின் இசை அதிகம் என்பதாலே ( கொர்..பூர்..டார்..).. உனக்கு இந்த பேரோ..

என் நண்பனை தூங்க வைத்து விட்டு நீ விழித்து கொள்கிறாய்...
உனக்கு துணையாய் என்னையும் எழுப்பிவிடுகிறாய்...
விதவிதமானச் சப்தத்தால் ரீங்காரமிடுகிறாய்...
நடு இரவில் புலம்ப வைக்கிறாய்.....
பக்கத்தில் இருப்பவரை நடுங்க வைக்கிறாய்....
இழுத்து போத்தி கொண்டு படுத்தாலும் இம்சையை தொடர்கிறாய்..
என்னை மட்டும் உளற வைக்கமால்....
தூக்கத்தில் என் நண்பனையும் உருள வைக்கிறாய்...

நண்பனின் நண்பன் !! எனக்கும் நண்பன்...
நட்புக்கு துரோகம் அழகல்ல...
ஆனாலும் துரோகம் செய்யம் நான் ரெடி..
என்ன துரோகம் நான் செய்தால் ...
என் நண்பனை விட்டு நீ பிரிவை !!! சொல் !!!..
முடியலை !!! குறட்டை நண்பா !!! என்னால முடியல !!!

நம் நட்புக்காக விட்டு விடு என் நண்பனை....

எழுதியவர் : கலிபா சாஹிப்.. (6-Jan-12, 12:51 am)
பார்வை : 401

மேலே