எப்படி இவனுக்கு கைமாறு செய்வேன்..?

அவனோடு விளையாடுகையில்
அளவில்லாத சந்தோசம்........
அன்றும் அப்படித்தான் -
அப்போது பதினைந்து வயதிருக்கும்..!
கில்லி விளையாடுகையில்
என் நண்பன் சுழட்டி சுழட்டி
சொல்லி அடித்தான்.........
குச்சி......விர் விர்ரெனப் பறந்து.....வர...
வீல் எனக் அலறினேன் - எனது
விழியில் குத்தி விழுந்தது
ஒரு கண் நிலத்தில்.........
ஐயோ வேதனை...! மரண வலி...!
ரத்தம் குபு குபு என கொட்டியது...!
அடுத்து நான் கண்விழித்தபோது...
ஆஸ்பத்திரியில் நண்பன் என்
அருகில் உள்ள பெட்டில் கண்
ஆபரேசன் செய்து படுத்திருந்தான்..!
சுயநினைவில் புரிந்து கொண்டு...
நான் நட்பின் அன்பால் அழுகிறேன்..!
நண்பனுக்கு இப்போது ஒரு கண்...!
நண்பனின் ஒரு கண் இப்போது
என் இரு கண்ணில் ஒரு கண்.......!
என் இரு கண்களால் அவன்
ஒற்றைக் கண்ணில் வழிந்த கண்ணீர்...
மன்னிச்சிருடா என்றது......!
எப்படி இவனுக்கு கைமாறு செய்வேன்..?

அன்புடன் ஹரி

எழுதியவர் : (6-Jan-12, 9:18 am)
பார்வை : 402

மேலே