***எப்படி மறப்பேன் உன்னை !!! ***

எதுவுமே இல்லை என்று நீ சொல்லிவிட்டாய்
இருந்தாலும்...........

இன்னும் இருக்கிறது உன் நினைவுகள்
என் இதயத்தில்.....

உயிராக நேசித்த நீ மறந்து விட்டாய்.

நீ மறந்தாலும் நான் உன்னை மறந்திடுவேன் என்று எண்ணினாயா?

உன் நினைவு என்னிதயம் உறங்கும் வரை நிலைத்திருக்கும்.

நீ உதறிவிட நினைப்பது என்னையா?

நான் உன்மேல் கொண்ட அன்பையா?

உடலோடு உயிர் உள்ளவரை நான் உன்னை உதறிவிடமாட்டேன்.

கடந்தகால ஞாபகங்களும் நிகழ்கால வலிகளும்
என்னை ரொம்பத் தான் கொல்கிறது.

நீ என்னுயிர்த் தோழி என்றானபின்

உன்னை மறக்கும் உள்ளம் எனக்கில்லை!
உன்னையே என்றும்

உண்மையாய் நேசிக்க உரிமை கேட்கிறேன் _ இதை

உணர்ந்து கொள் என்னுயிர்த் தோழியே!!!!!!!!!
********ஒருமனதை உறங்க வைத்தான்.

ஒருமனதை தனிமையில் கலங்க வைத்தான்.

இருவர் மீதும் குற்றமில்லை. இறைவன் செய்த குற்றமடி!!!!!!!!!!!!*******

எழுதியவர் : (6-Jan-12, 4:07 am)
பார்வை : 679

மேலே