இசை புயல் - AR -

இறைவன் எமக்கு அளித்த புயல்...

மக்கள் பீதி கொள்ளும் புயல் அல்ல
இந்த புயல் மக்கள் மனதை கொள்ளும் இசைபுயல்

ரோஜாவில் தொடங்கி எந்திரன் வரை
இயந்திரமாய் செல்கிறது அந்த புயல்

சூறாவளி காற்றை விட இந்த புயல் காற்று
மக்களுக்கு நெருக்கமான இசை காற்று

பிலிம்பேரில் தொடங்கி ஆஸ்காரையும்
அடித்து செல்கிறது இந்த இசை புயல்

அறிவியலின் மக்கள் ஈர்ப்பு அலைகளாய்
வீசுகிறது உன் இசை அலைகள்

இந்த இசை புயல் 46 வது ஆண்டை
அடியெடுத்து வைக்கிறது இன்று..

இன்னும் பல நூறு ஆண்டுகள் இந்த புயல்
விண்ணைதாண்டி தன் இசை பயணத்தை தொடரும்..

இசையின் பெயரில் வாழ்வை கொடுத்த
இறைவனுக்கு நன்றி சொன்னால் மிகையல்ல..

நம் இசை புயலுக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துகள்..
எல்லா புகழும் இறைவனுக்கே ..!

- இசை புயல் ரசிகன்..

எழுதியவர் : Sakthi kj (6-Jan-12, 10:38 am)
பார்வை : 410

மேலே