என் வாகன எண்: 143

என்
இருசக்கர வாகனத்தில்
நீ
அமருவாயெனில்..,
புகைக்கு
பதிலாய்
பூக்கள் விழும்..
சப்தத்திற்கு
பதிலாய்
சங்கீதம் கேட்க்கும்....!!!
பிச்சை கேட்கும்
சிக்னல்
சிறுமிகள்
தேவதைகளாக
மாறி இருப்பார்கள்...!!!
டிராபிக் காவலர்கள்
லஞ்சம் தரமுயல்பவர்களை
மடக்கி காவல் துறையிடம்
ஒப்படைப்பார்கள்.....!!!
கோணல் மாணலாக
நிற்கும் பார்கிங்
வாகனங்கள்
நாம் வரும் வாகனத்தை
கண்டதும்
ஆசிரியரை கண்ட
மாணவர்களை போல்
வரிசையாக நின்றுக்கொள்ளும்...!!!
அன்று உலகில்
நடக்கும் விபத்துகள்
எதிலும்
எவரும் உயிரை
இழக்காமல் பிழைப்பர்.....!!!
என் வாகன எண்: 143