தலைப் பிரசவம்
இரவு 12 மணி,
நிறை மாத கர்பிணி என் கண்மணி.
வலி வந்ததை என்னிடம் வடித்தாள்.
விஷயம் கேட்ட பின்
என் இருதய இடிப்பும் இம்சையோடு கேட்கலானது.
தைரியம் தழுவி வண்டியை கிளப்பினேன்.
பிடித்த பாடலை இசைக்கச் சொன்னாள்.
இதயத் துடிப்பின் ஓசை
காதில் பசை தடவி ஒட்டி இருந்ததால்,
கவனிக்க மறந்தேன்.
அவளே இசைதட்டை சொருகி இசைவித்தாள்.
பாடல் வரிகளை முனு முணுத்த
அவள் முகத்தை பார்க்க பயந்து,
பாதையை பார்த்தே வண்டி ஓட்டினேன்.
என் கயல்விழி, மென்மையானவள்.
தாமரை கூட சூரியனை
கண்டுவிட்டால் உயிர் மலர்ந்து விடும்,
இவளோ என் நினைப்பில் இவள் இல்லையென்று
அறிந்துவிட்டால் கருகி விடுவாள்.
எதிலுமே பயம்.
நான் மட்டும் தான் அவளின் தைரியம்.
உடல் கோளாறா?
மருந்து உட்கொள்வாள் என் சம்மதத்தோடு மட்டுமே.
நான் மருத்துவன் அல்ல.
என்னை பார்க்காவிடில்,
தூக்கம் கூட மறந்துபோகும்,
மருந்தாகும் உணவுகள்,
மெலிந்து போவாள் நொடி பொழுதில்.
நான் இருக்கும் தைரியத்தில்
பிரசிவிக்க்க பிரயானப்பட்டாள்.
நான் தைரியவானா?
ஆமாம் எதிலும் தைரியம்,
விறைப்பு குறையாத வீரியம் கொண்டவன்.
ஆனால் இவளுகென்று ஒன்று வருகையில்
மட்டும் துணிச்சல் துளைத்த
அனிச்சம் மலராகிவிடுவேன்.
ஐயோ எப்படி எதிர் கொள்வாள்
இந்த பிரசவ பலப்பரிட்சையை.
யோசித்து முடிக்க
மருத்துவ மனை வாசனை மூக்கையும்,
மூளையையும் துலைதெடுத்தது.
கட்டிடத்தில் கால் பதிக்க,
சிலர் கதறி அழும் சோக ராகம்,
கண்மணியை கலங்க வைத்தது.
ஏதோ சாலை விபத்தில் கணவன்,
காலமான சேதியாம்.
கலங்காமல் இருபாயடி,
இது நித்தம் நித்தம் நடக்கும்
சாலை யுத்தத்தின் சாபக்கேடு என்றேன்.
சரி சரி என்று கரம் பற்றினாள்.
நிர்சே வினவினாள் என்னவளிடம்,
மறுநொடியே புன்னகை பூத்து உள்ளே சென்றாள்.
விளங்கி கொள்ள முடியாமல்,
பின் தொடர்ந்து கேட்டேன்.
சிரித்துக் கொண்டே சொன்னாள்.
வலி வந்தாள் யாரும் சொல்ல மாட்டார்கள்,
ஓலமிடு வார்கலென்று.
உன் மனைவிக்கு வந்தது வலியே இல்லை,
இருந்தாலும் அறையில் தங்கி
காலையில் மருதுவட்சியை கண்டு செல் என்றாள்.
இது வலி இல்லையென்றால், எது வலி?
சித்தம் சீக்குபிடிதது.
காலையில் கண்ட மருத்துவச்சி
இன்றோ, நாளையோ பிள்ளை
என் வசம் என்றாள்.
இதை கேட்ட நான் சிரித்துக் கொண்டே சிலையானேன்.
என் பைங்கிளியோ பயந்து கொண்டே சிரித்தாள்.
வெளியே அழைத்த மருத்துவச்சி,
வலி வர இரு பாட்டில்கள் குளுகோஸ்
இடுகிறேன் என்றாள்.
என்ன கொடுமை இது என தோன்டிற்று.
வலி மறக்க மருத்துவர் நாடுவோம்.
இங்கோ வலி வர வேண்டிக் கொள் என்கிறார்.
சரி சொல்லி உள்ளே சென்றேன்.
சொன்னபடி கையில் டூப் சொருகி
சொட்டவிடார்கள்.
நேரமாக நேரமாக என் மனைவி
முகம் மங்கலானது.
உலக தைரியத்தை உள் வாங்கிகொண்டு
கைபிடித்து எதிர் அமர்ந்தேன்.
சில தருணத்தில் என் விரல்களை
சிதைக்க செய்தாள்.
பற்களை கடித்த படி,
கண்கள் மூடிய படி,
மேல்மூச்சு, கீழ்மூச்சு விடலானாள்.
அவளுக்கு வலி வந்ததை
என் விரல்கள் விளக்கின.
மூன்று வினாடிக்கு ஒரு சொட்டு.
ஒவ்வொரு சொட்டும் தேகத்தை
பதம் பார்த்ததுபோல்.
சுமார் 1030 க்கு ஐயோ என்று அலறினால்.
சத்தங்கேட்ட நர்ஸ், என் காதில் வந்து,
இதுபோல் இன்னும் பல மடங்கு அதிகமாக வேண்டுமென்றாள்.
கேட்ட எனக்கு கோபம் கொப்பளித்தது.
குழந்தை மனதில் கொண்டு
கோடி போல் தலை கவிழ்ந்தேன்.
மனைவியின் கண்கள் பாட்டிலை
உற்று நோக்கியது.
ஒரு ஒரு சொட்டுக்கும் அலறல்,
இரண்டு வினாடி அமைதி,
பின்பு அலறல், அமைதி,
அலறல்,அமைதி.
இதை பார்க்க பார்க்க,
என் மூளை வெடிக்க
துடியாய் துடித்தது.
என் வாரிசு பெற,
என் மறு உயிர் மன்றாடுகிரதே,
வேண்டுமா வாரிசு?
பதில் அறிய மூளையை
நாடி தோற்றுவிட்டேன்.
இதற்கிடையில் மறு பாட்டில்
மாற்ற வந்த நர்சிடம்
கண்ணீர் விட்டு கெஞ்சுகிறாள்
வேண்டாமென்று. பலனில்லை.
கொதித்து எழுகிறாள், மாற்றமில்லை.
என்னைத் துனைகிளுக்கிறாள், வென்றபாடில்லை.
குழந்தை போல் குலுங்கி குலுங்கி அழுகிறாள்,
வலி குறைந்த பாடில்லை.
இம்முறை ஒரு வினாடிக்கு ஒரு சொட்டு,
அலறி, அலறி, அமைதியாகாமல்,
அலறிக் கொண்டேயிருந்தாள்.
ஒரு தருணம் பளார் என்று என் கன்னத்தில்
அறைந்தாள், பின்பு அமைதியானாள்.
என்னாச்சு என்றேன்?
சிறுநீர் கழித்துவிட்டேன் போல் என்றாள்.
காலை விளக்கி பார்த்த என்னக்கு
மூச்சு முட்டிற்று, ரத்தமான ரத்தம்.
ஓடி வந்த நர்ஸ் பனிக்குடம் வுடைந்து விட்டது
என்று அறுவை சிகிச்சை அறைக்கு இட்டுச் சென்றாள்.
மறுநொடியே கணீர் குரலில் கூச்சலிட்டாள்
என் ஆசை மகள்.
பாய்ந்து சென்று, மனைவி முகம் கண்டு,
மறு ஜென்மம் பெற்று கொண்டேன்.
எப்பொதும் இல்லாத பொலிவு
அவள் முகத்தில் மலர்திருந்தது.
ஆனந்த கலிப்பில் முத்தம்
கொடுத்து எங்கள் புத்திர
ஏக்கத்தை போக்கிக்
கொண்டோம்.