கண்ணாடி தொட்டி....

என் பரந்த உலகம் இந்த கண்ணாடி
தொட்டிக்குள் அடங்கி விட்டது.....

என் அலையடிக்கும் கடல் இந்த
குடுவையில் குடியேறி விட்டது....

என்னை பார்க்க வருபவர்களை நான்
பார்க்கிறேன் எனக்கொரு விடுதலை
தருவார்களா என்று...

உணவுக்கு பஞ்சமில்லை ஆனாலும் -என்
உணர்வுக்கு மதிப்பில்லை.....

கண்ணாடிக்குள் சுற்றியே காலம்
கழிக்கின்றேன் விடுதலை கிடைக்கும்
என்ற வீணான நம்பிக்கையில்....

என் நண்பனின் மரணம் அது எனக்கொரு
பதில் சொன்னது நீயும் இப்படிதான்
துடித்திறப்பாய் என்று...

அழகெனக்கு தந்து சுதந்திரத்தை பரித்ததென்ன
சுத்தந்திரமில்லா அழகு இருந்து பயன் என்ன...

கண்ணாடி தொட்டியில் வண்ண மீனாக
இன்னும் என் பயணம் சுற்றிக்கொண்டுதான் இருக்கும்...(Gold fish )

எழுதியவர் : anusha (9-Jan-12, 3:53 pm)
Tanglish : kannadi thotti
பார்வை : 263

மேலே