நினைத்துப்பார்க்கிறேன்
நினைத்துப்பார்க்கிறேன் !
நிலவு தூங்கும் நேரம்
என் நினைவு தூங்கவில்லை
உன் நட்பு கலந்த
அந்த அன்பினால் தானோ !
நினைத்துப்பார்க்கிறேன் !
நடு இரவு கூட தூங்கியது
என் இதயம் தூங்கவில்லை
உன் நட்பு கலந்த
அந்த அன்பினால் தானோ !
நினைத்துபார்க்கிறேன் !
விழிகள் மூடிய சூரியன்
விளித்து கொண்டு பிரகாசமானது
என் விழிகள் மூடவே இல்லை
உன் நட்பு கலந்த
அந்த அன்பினால் தானோ !
நினைத்துப்பார்க்கிறேன் !
மதிய நேரமும் வந்தது
என் மதி திரும்பி வரவில்லை
உன் நட்பு கலந்த
அந்த அன்பினால் தானோ !
நினைத்துப்பார்க்கிறேன் !
மாலை பொழுதும் வந்தது
மானிடன் உன்னை மறக்வில்லை !
உன் நட்பு கலந்த
அந்த அன்பினால் தானோ !
நினைத்துப்பார்க்கிறேன் !
மறுபடியும் நிலவு தேய்கிறது
எதனால் என்று உலககுத்தெறியும்
நான் தேய்வது உன்னால்
என்று ஊருக்கு தெரியும் ?
நினைத்துப்பார்க்கிறேன் !
கடன் அன்பை முறிக்கும்
என்ற பழமொழி உண்மைதானோ !
வேண்டும் என்றால் உன்
அன்புக் கடனை திருப்பி தருகிறேன்
மீண்டும் புது பிறப்பு எடுப்போம் !
நினைத்துப்பார்க்கிறேன் !
எழுத்துவில் பிறந்த
அந்த நட்பு கலந்த அன்பை
மீண்டும் உயிர்பெற்று
என் உயிர் எழுத்தாக வரும்
என்று "நினைத்துப்பார்க்கிறேன்" !
என்றும் அன்புடன்